Editorial / 2018 மே 21 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிக்காக நான்கு பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, மொஹன் டி சில்வா மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
நால்வருடைய பெயர்களும், இலங்கையிலுள்ள கிரிக்கெட் கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் ஏதேனுத் அதிருப்திகள் காணப்படுமாயின் நாளைய தினத்திற்குள் முன்வைக்குமாறும் இலங்கை கிரிக்கெட் சபைs அறிவித்துள்ளது.
ஐந்து பேர் கொண்ட தேர்தல் குழு கடந்த சனிக்கிழமை (19) நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026