Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் எந்த மோசடி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லையெனத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய, கிரிக்கெட் மீதான காதலால், சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவால் தன்மீது விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடையை ஏற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவுடன் ஒத்துழைக்க மறுத்தமைக்காக, தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவராகவிருந்த சனத் ஜெயசூரிய தடையை எதிர்கொண்டுள்ளார். சனத் ஜெயசூரியவிடம் கோரப்பட்ட, அவரது தொடர்பாடல் சாதனங்களை அவர் கையளிக்க மறுத்தமையைத் தொடர்ந்தே, சனத் ஜெயசூரிய மீது குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின் கீழ், வீரர்கள், நடுவர்கள், நிர்வாகிகளிடமிருந்து, உடனடியாக தொடர்பாடல் சாதனங்களைக் கையளித்தல் உள்ளடங்கலாக, வங்கி விவரங்கள், அலைபேசி விவரங்கள், சொத்துகளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், கையளிக்கத் தவறும் அல்லது மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன் மீதான தடையை சர்வதேச கிரிக்கெட் சபை விதித்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட சனத் ஜெயசூரிய, சிம் அட்டையொன்றையும் ஐபோனையும் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் அதிகாரிகளிடம் கையளிக்காததாலேயே விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றம் சுமதப்பட்டதாகவும் எந்தவித மோசடிக் குற்றச்சாட்டுகளோ, சூதாட்ட குற்றச்சாட்டுகளோ அல்லது உள்ளகத் தகவல்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாடுகளோ தன் மீது காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago