Editorial / 2017 நவம்பர் 14 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் எட்டாம் நிலை வீரரான, பெல்ஜியத்தின் டேவிட் கொபின், உலகின் ஆறாம் நிலை வீரரான, பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ் ஆகியோர் வென்றுள்ளனர்.
இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், 7-6 (7-5), 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில், உலகின் முதல்நிலை வீரரான, ஸ்பெய்னின் ரபேல் நடாலை டேவிட் கொபின் வென்றார்.

இந்நிலையில், குறித்த போட்டியில் தோல்வியைத் தளுவியமைத் தொடர்ந்து, 16 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால் டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரிலிருந்து விலகி தனது பருவகாலத்தை முடித்துக் கொண்டார்.
இத்தொடர் ஆரம்பிக்குமுன்னரே தனது முழங்கால் சரியாக இல்லை எனத் தெரிவித்த 31 வயதான ரபேல் நடால், டேவிட் கொபினுடனான போட்டியில் கடுமையாயகப் போராடி, போட்டியை மூன்றாவது செட் வரைக்கும் கொண்டு சென்றே தோற்றிருந்தார். இப்போட்டி இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்திருந்தது.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரான, ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்மை, 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் கிறிகர் டிமிட்ரோவ் வென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெறும் போட்டியில் கிறிகர் டிமிட்ரோவ்வை டேவிட் கொபின் எதிர்கொள்ளவுடன் நாளை அதிகாலை 1.30 மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், ரபேல் நடாலை தொடரில் பிரதியீடு செய்த உலகின் 10ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ புஸ்டா, டொமினிக் தெய்மை எதிர்கொள்கிறார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago