Shanmugan Murugavel / 2020 நவம்பர் 29 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் எஃப்.சி கொலோனுக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.
பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை தொர்கன் ஹஸார்ட் பெற்றிருந்த நிலையில், எஃப்.சி கொலோன் சார்பாகப் பெறப்பட்ட கோல்களை எல்லைஸ் ஸஹிரி பெற்றிருந்தார்.
இதேவேளை, வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. பயேர்ண் மியூனிச் சார்பாக, கிங்ஸ்லி கோமன், றொபேர்ட் லெவன்டோஸ்கி, டக்ளஸ் கொஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வி.எஃப்.பி ஸ்டட்கார்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை தன்குய் குலிபலி பெற்றிருந்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago