2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கோப்பா அமெரிக்கா: பராகுவேயிடம் தோற்ற சிலி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற பராகுவே உடனான போட்டியில், 0-2 என்ற கோல் கணக்கில் சிலி தோற்றது.

பராகுவே சார்பாக, பிரையன் சமுடியோ, மிகேல் அல்மிரோன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கு பராகுவே தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை, பொலிவியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற உருகுவேயும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. உருகுவே சார்பாக, எடின்சன் கவானி ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்னும் ஒரு குழு நிலைப் போட்டி மீதமிருக்கையிலேயே, குழுப் போட்டிகளுடன் பொலிவியா தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X