2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சென்.லூயிஸில் விஸ்வநாதன் ஆனந்துக்கு வெற்றி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க மாநிலமான மிசூரியில் உள்ள சென்.லூயிஸ் நகரத்தில் இடம்பெற்ற 2016ஆம் ஆண்டின் செஸ் சம்பியன்ஸ்களிடையேயான போட்டியில் நேற்றுத் திங்கட்கிழமை (14), வெற்றி பெற்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 60,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றார்.

மேற்குறித்த காட்சித் தொடரில், வேறு மூன்று கிராண்ட் மாஸ்டர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் ஹிகரு நகமுரா இரண்டாமிடம் பெற்றதுடன், மற்றொரு ஐக்கிய அமெரிக்கரான பபியானி கருவானா மூன்றாமிடத்தைப் பெற்றனர். நான்காமிடத்தினை, பல்கேரியாவின் வெசெலின் டொபொலோவ் பெற்றார்.

ஆனந் 15 புள்ளிகளைப் பெற்றதோடு, நகமுரா, கருவானா, டொபலோவ் ஆகியோர் 14, 11, 8 புள்ளிகளைப் பெற்றனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .