Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணிக்கெதிராக சிம்பாப்வே அணிக்குக் கிடைத்த 8 விக்கெட் தோல்வியைத் தொடர்ந்து, அணியின் பயிற்றுநர் ஹீத் ஸ்ட்ரீக், கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
டெஸ்ட் தொடரில், சிம்பாப்வே அணி ஓரளவு போராடியிருந்த போதிலும், இப்போட்டியில் மோசமாக விளையாடிய நிலையில், இப்போட்டியில் நல்ல விடயமென எதையும் கூற முடியாது என, ஸ்ட்ரீக் குறிப்பிட்டார்.
பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான இவ்வாடுகளத்தில், சிம்பாப்வே அணி 154 ஓட்டங்களையே பெற்ற நிலையில், இலங்கை அணியின் முதலாவது பந்திலேயே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வாவின் துடுப்பில் பட்ட பந்தை, விக்கெட் காப்பாளர் பிடித்தார். ஆனால், அந்தப் பந்து, முறையற்ற பந்தாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், 78 ஓட்டங்களைக் குவித்த தனஞ்சய டி சில்வா, போட்டியின் நாயகனாகவும் தெரிவானார். தனக்குக் கிடைத்த வாய்ப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், தான் ஆட்டமிழந்திருந்தால், இலங்கை அணிக்குக் கடினமாக இருந்திருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டார்.
"பந்து, அங்குமிங்கும் திரும்பிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நான் ஆட்டமிழந்திருந்தால், மேலும் 3 அல்லது அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கலாம்" என, டி சில்வா குறிப்பிட்டார்.
இத்தொடரின் அடுத்த போட்டி, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பகல் 1 மணிக்கு, இப்போட்டி ஆரம்பமாகும்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago