2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சிம்பாப்வேயை இலகுவாக வென்றது இலங்கை

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 14 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரின் முதலாவது போட்டியில், சிம்பாப்வே அணியை, இலங்கை அணி இலகுவாக எட்டு விக்கெட்டுகளால் வென்றது.

ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணியின் இத்தொடருக்கான தலைவர் உபுல் தரங்க, தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, பீற்றர் மூர் 47 (52), அணித்தலைவர் கிறேமி கிறீமர் 31 (56) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கையணி சார்பாக அறிமுகத்தைக் மேற்கொண்ட அசேல குணரட்ன மூன்று விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால், நுவான் குலசேகர, நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

155 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 24.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 78(75), நிரோஷன் டிக்வெல்ல 41(38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தினேஷே பணயங்காரா, சமு சிபாபா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .