Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் மார்லன் சாமுவேல்ஸின் பந்துவீச்சு முறை மீது, முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியினைத் தொடர்ந்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலியில் இடம்பெற்ற இப்போட்டியில், இலங்கை அணியின் ஒரே இனிங்ஸில் 27 ஓவர்களை வீசியிருந்த அவர், 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த திமுத் கருணாரத்னவின் விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சை, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையமொன்றில் சோதனைக்குள்ளாக்க வேண்டுமென்பதோடு, அந்த முடிவுகள் வரும்வரையில் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்படுவார்.
ஏற்கெனவே இரண்டு தடவைகள் இதற்கு முன்னர் அவரது பந்துவீச்சு கேள்விக்குள்ளப்பட்டிருந்தது. முதற்தடவையின் போது அவரது பந்துவீச்சு முழுமையாகத் தடை செய்யப்பட்டதோடு, இரண்டாவது தடவை, அவரது வேகமான பந்துகள் மாத்திரம் தடை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago