Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின், கடந்த திங்கட்கிழமை (21) ஆர்சனல் அணிக்கும் மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியில், ஆர்சனல் அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் ஆரம்பத்தில் பந்தை சிற்றியே கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், கிடைத்த அருமையான வாய்ப்பொன்றை சிற்றியின் கெவின் டீ புரூன் வீணாக்கியிருந்தார். அதனையடுத்து, போட்டியின் 33ஆவது நிமிடத்தில் மேசூத் ஒசிலிடம் இருந்து பந்தைப் பெற்ற தியோ வொல்கொட், அதைக் கோலாக்கி, ஆர்சனலுக்கு முன்னிலையை வழங்கினார்.
பின்னர் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் மேசூத் ஒசிலிடம் இருந்து பந்தைப் பெற்ற ஒலிவர் ஜிரோட், அதைக் கோலாக்கி ஆர்சனலுக்கு 2-0 என்ற முன்னணியை வழங்கினார்.
இரண்டாவது பாதியில் 82ஆவது நிமிடத்தில் சிற்றியின் யாயாந தோரே, அபாரமாக கோலொன்றைப் பெற்ற போதும், அதன்பின்னர் கிடைத்த இரு வாய்ப்புக்களை இவரும் மாற்று வீரர் வில்பிரைட் போனியும் வீணாக்கியிருந்தனர்.ந இதனால் இறுதியில், 2-1 கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியினையடுத்து 2004ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறீமியர் லீக் பட்டத்தை கைப்பற்றியிருக்காத ஆர்சனல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்துக்குச் சென்று, முதலிடத்தில் உள்ள லெய்செஸ்டரை விட இரண்டு புள்ளிகளே குறைவாக பெற்றுள்ளது.
இந்தப் போட்டியின் நாயகனாக தெரிவான ஒசில், இந்தப் போட்டியுடன் சேர்த்து 15 தடவைகள் கோல் பெறுவதற்கு உதவியுள்ளார். இந்தப் பருவகாலத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள ஒசிலின் இந்த அடைவு மட்டமானது, ஒரு பிறீமியர் லீக் பருவகாலத்தில் வீரரொருவரால் பெறப்பட்ட வேகமான அடைவு மட்டமாகும். மொத்தமாக பிறீமியர் லீக்கில் 29 தடவைகள் கோல் புரிவதற்கு உதவிய ஒசில், செல்சியின் ஈடின் ஹசார்ட்டோடு இந்த சாதனையை பகிர்ந்துள்ளார். எனினும் அவரை விட 59 போட்டிகள் குறைவாக இந்த சாதனை மட்டத்தை அடைந்துள்ளார்.
14 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
53 minute ago
1 hours ago