Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் கப்பிற்றல் வண் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டிகளில், ஆர்சனல், செல்சி, மன்செஸ்டர் யுனைட்டட், கிறிஸ்டல் பலஸ், சௌதம்டன், ஷெபீல்ட் வெனிஸ்டே, நோர்விச் சிற்றி, லிவர்பூல் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
ஆர்சனல் அணிக்கும் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில், ஆர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆர்சனல் அணியின் மத்தியூ பிளாமினி 26ஆம், 78ஆம் நிமிடங்களில் கோல்களைப் பெற்றதோடு, டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோல், கலும் சம்பேர்ஸினால் பெறப்பட்ட ஒவ்ண் கோலாக அமைந்தது.
செல்சி அணிக்கும் வல்சல் அணிக்குமிடையிலான போட்டியில், றமையர்ஸ் (10), லொய்க் றெமி (41), கென்னடி (52), பெட்ரோ றொட்ரிகஸ் (90) ஆகியோர் பெற்றுக் கொண்ட கோல்களின் உதவியுடன், அவ்வணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வல்சல் சார்பாகப் பெறப்பட்ட கோலை, ஜேம்ஸ் ஓ கொன்னர் பெற்றுக் கொடுத்தார்.
மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் இப்ஸ்விச் டௌண் அணிக்குமிடையிலான போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
யுனைட்டட் சார்பாக வெய்ன் றூணி (23), அன்ட்ரியஸ் பெரேய்ரா (60), அந்தோனி மார்ஷியல் (90) ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
தவிர, சார்லட்டன் அத்லெட்டிக் அணிக்கெதிரான போட்டியில் கிறிஸ்டல் பலஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கிலும் மில்ட்டன் கேய்னெஸ் டொன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சௌதம்டன் 6-0 என்ற கோல் கணக்கிலும் நியூகாசில் யுனைட்டட் அணிக்கெதிரான போட்டியில் ஷெபீல்ட் வெனிஸ்டே 1-0 என்ற கோல் கணக்கிலும் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்கெதிரான போட்டியில் நோர்விச் சிற்றி அணி 3-0 என்ற கோல் கணக்கிலும் கர்லிஸ்லி யுனைட்டட் அணிக்கெதிரான போட்டியில் விலர்பூல் அணி 3-2 என்ற பெனால்டி உதைகளின் அடிப்படையிலும் வெற்றிபெற்றன.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago