2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செல்சிக்காக பட்டத்தை பெற டொம் குரூஸால் மட்டுமே முடியும்: மொரின்கோ

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 23 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் இங்கிலாந்து பிறிமியர் லீக் தொடரில் முதல் நான்கு இடங்களுக்குள் செல்சியால் வரமுடியும் எனத் தெரிவித்த அவ்வணியின் பயிற்சியாளர் ஜோஸ் மொரின்கோ, எனினும் செல்சிக்காக பட்டத்தை வென்று கொடுக்க மிஷன் இம்பொசிபிள் நாயகன் டொம் குரூஸால் மட்டுமே முடியும் என அவர் தெரிவித்தார்.

இறுதியாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில் முதலாவது வெற்றியைப் பெற்றுள்ள செல்சி அணி, இந்தப் பருவகாலத்தில் 13 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் தற்போது பதினைந்தாவது இடம் வகிக்கின்றது. நான்காமிடம் வகிக்கும் ஆர்சனல் அணிக்கும் செல்சிக்குமிடையே 12 புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகின்றது.

நான்காவது இடத்தை அடைவது எனக்கு இயலாத காரியம் அல்ல எனத் தெரிவித்த மொரின்கோ, பட்டத்தை வெற்றி கொள்வது பற்றி என்னை வினவுவீர்களினால், அது இயலாத காரியம் (மிஷன் இம்பொசிபிள்) என நான் எனத் தெரிவிப்பேன் என்று கூறிய மொரின்கோ, சிலவேளை டொம் குரூஸால் முடியும் எனத் தெரிவித்த அவர், எனினும் அது சிக்கலானது எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .