2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செல்சிக்கான எனது ஃபோர்ம் போதாது

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்சி அணியின் மத்தியகள வீரரான ஈடன் ஹஸார்ட், தனது அணிக்கான தனது ஃபோர்ம் போதுமானதாக இல்லையென ஏற்றுக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்பு சம்பியன்களான செல்சி அணி, இப்பட்டத்தை வெல்வதில் ஹஸார்ட் சிறப்பான பங்கை ஆற்றியிருந்தார். அத்தோடு, கடந்தாண்டுக்கான தொழில்முறைக் கால்பந்தாட்ட வீரர்களின் சம்மேளனம், கால்பந்தாட்ட எழுத்தாளர்களின் சங்கம் ஆகியவற்றின் சிறந்த வீரர்களுக்கான விருதை வெற்றிகொண்டிருந்தார்.

எனினும், இவ்வாண்டுக்கான போட்டிகளில் செல்சி அணி சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, ஹஸார்டின் ‡போர்மும் சிறப்பானதாகக் காணப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து, அணி முகாமையாளரான மொரின்ஹோவின் விமர்சனத்தையும் அவர் சம்பாதித்திருந்தார்.

மொரின்ஹோவின் விமர்சனம் சரியானது எனக் குறிப்பிட்ட ஹஸார்ட், கடந்த பருவகாலத்துக்கான தனது ‡போர்மை வெளிப்படுத்துவது தனது பொறுப்பு என்ற மொரின்ஹோவின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .