2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

செல்சி, சிற்றி, ஆர்சனல் வென்றன

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று (26) இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

செல்சி, 3-0 என்ற கோல் கணக்கில் போர்ண்மெத் அணியைத் தோற்கடித்தது. செல்சி சார்பாக, பெட்ரோ ஒரு கோலினைப் பெற்றதுடன், பெனால்டியொன்றின் மூலம் ஈடின் ஹஸார்ட் ஒரு கோலினைப் பெற்றார். “ஓவ்ண் கோல்” முறையில் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது.

மன்செஸ்டர் சிற்றி, 3-0 என்ற கோல் கணக்கில் ஹள் சிற்றியைத் தோற்கடித்திருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக கெலெச்சி லெஹாஞ்சோ ஒரு கோலினைப் பெற்றதோடு, பெனால்டி மூலம் யாயா தோரே ஒரு கோலினைப் பெற்றிருந்தார். “ஓவ்ண் கோல்” முறையில் ஒரு கோல் கிடைக்கப் பெற்றிருந்தது.

ஆர்சனல், 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணியைத் தோற்கடித்தது. ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை, போட்டியின் 86ஆவது நிமிடத்தில் ஒலிவர் ஜெராட் தலையால் முட்டி பெற்றிருந்தார்.

மன்செஸ்டர் யுனைட்டெட், 3-1 என்ற கோல் கணக்கில் சந்தர்லேண்ட் அணியைத் தோற்கடித்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, டேலி பிலிண்ட், ஸல்டான் இப்ராஹிமோவிக், ஹென்றிக் மிகித்தரயான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

தற்போதைய பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி, 0-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றனிடம் தோல்வியுற்றது.

நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், 4-1 என்ற கோல் கணக்கில் சுவான்சீயை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணி தோற்கடித்ததுடன், 1-0 என்ற கோல் கணக்கில் மிடில்ஸ்பேர்க்கை பேர்ண்லி தோற்கடித்தது.  

மேற்படி போட்டிகளின் முடிவில், 46 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் செல்சி அணி முதலிடம் வகிக்கிறது. செல்சியை விட ஏழு புள்ளிகள் குறைவாக 39 புள்ளிகளுடன் உள்ள மன்செஸ்டர் சிற்றி புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

லிவர்பூலும், ஆர்சனலும் தலா 37 புள்ளிகளுடன் உள்ளபோதும், கோல் எண்ணிக்கை அடிப்படையில் லிவர்பூல் மூன்றாமிடத்திலும், ஆர்சனல் நான்காமிடத்திலும் உள்ளது.

அதேபோன்று, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணியும், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியும் தலா 33 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோல் எண்ணிக்கை அடிப்படையில் டொட்டென்ஹாம் ஐந்தாமிடத்திலும், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆறாமிடத்திலும் காணப்படுகின்றன.

தற்போதைய பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி 17 புள்ளிகளுடன் 16ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .