2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சங்கா, மஹேல மீது அர்ஜுன காட்டம்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் மீது, அமைச்சரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இருவருமே அண்மையில் ஓய்வுபெற்றுள்ள போதிலும், அவர்கள் ஓய்வுபெறும் வரை தங்களது துடுப்பாட்ட நிலையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

'இன்று, வீரர்களின் ஒழுக்கமென்பது முழுமையாக அழிவடைந்துள்ளது. நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய நான், எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன். துடுப்பாட்ட இடமொன்றில் ஏனைய இளைய வீரர்கள் பரிச்சயத்தைப் பெறுவதற்கே அதைச் செய்தேன்" எனத் தெரிவித்தார்.

'ஆனால், அண்மைய காலங்களில், எப்போதுமே சங்கக்கார மூன்றாமிடத்தில் களமிறங்கினார். நான்காமிலக்கத்தில் மஹேல ஜெயவர்தன களமிறங்கினார். அந்த இடங்களில் இளைய வீரர்கள் பரிச்சயமாகிக்கொள்ள, அவர்கள் வாய்ப்பு வழங்கியிருக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

எனினும், வீரர்களைப் பிரதானமாகக் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை எனத் தெரிவித்த அர்ஜுன, நிர்வாகிகளையே குற்றஞ்சாட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவராகவும் கடமையாற்றிய அர்ஜுன ரணதுங்க, அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

'அண்மைய காலத்தில், விரும்பத்தகாத ஏராளமான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இவையெல்லாவற்றையும் நிறுத்தி, கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவ வேண்டுமென நான் நினைக்கிறேன். இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியை நான் நெருங்கியுள்ளேன். அதை நான், பின்னர் வெளிப்படுத்துவேன்" எனக் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .