Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் வீரர் கெவின் பீற்றர்சனின் கனவு 11 பேர் கிரிக்கெட் அணியில், இலங்கையின் ஓய்வுபெற்ற துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு இடம் கிடைத்துள்ளார். எனினும், உலக சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு இடம் கிடைக்கவில்லை.
விரேந்தர் செவாக்கை, 'ஒன்று அல்லது இரண்டு கிரிக்கெட் அமர்வுகளில் போட்டியை வெல்லக்கூடியவர்" எனக் குறிப்பிடும் பீற்றர்சன், சச்சின் டென்டுல்கரை ஜீனியஸ் எனவும் சுப்பர் ஸ்டார் எனவும் குறிப்பிடுகிறார்.
மூன்றாமிலக்கத்தில் றிக்கி பொன்டிங்கைத் தெரிவுசெய்து, தனது தலைமுறையின் சிறந்த துடுப்பாட்ட வீரரெனக் குறிப்பிடும் பீற்றர்சன், நான்காமிலக்கத்தில் ஜக்ஸ் கலிஸைத் தெரிவுசெய்து, கிரிக்கெட்டில் விளையாடிய மிகச்சிறந்த வீரர் எனக் குறிப்பிடுகிறார்.
ஐந்தாமிலக்கத்தில் குமார் சங்கக்காரவைத் தெரிவுசெய்து, அவரது கடின உழைப்பைப் பாராட்டுவதோடு, ஆறாமிலக்கத்தில் அன்ட்ரூ பிளின்டொப், ஏழாமிலக்கத்தில் அடம் கில்கிறிஸ்ட் எனக் காணப்படுவதோடு, ஷேன் வோணை எட்டாமிலக்கத்தில் தெரிவுசெய்வதோடு, அவரே தனது அணித்தலைவர் எனவும் குறிப்பிடுகிறார்.
ஏனைய வீரர்களாக, ஜேம்ஸ் அன்டர்சன், ஷொய்ப் அக்தர், கிளென் மக்ரா ஆகியோரை அவர் தெரிவுசெய்துள்ளார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago