2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 21 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐரோப்பா அல்லது தென் பசுபிக் பிராந்திய சம்பியன் (இம்முறை ஐரோப்பியச் சம்பியன் ஸ்கொட்லாந்து) ஆகிய 4 அணிகள் பங்குபெறும் "நான்கு தேசங்கள்" என்ற றக்பித் தொடரில், அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

குழுநிலைப் போட்டிகளில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு, 34-8 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனானது.

5ஆவது தடவையாக இடம்பெற்ற இந்தத் தொடரில், 1ஆவது, 3ஆவது, 5ஆவது தொடர்களில் சம்பியனாகிய அவுஸ்திரேலிய அணி, இதுவரை 3 தடவைகள் சம்பியனாகியுள்ளது. ஏனைய 2 தடவைகளும், நியூசிலாந்து அணி சம்பியனானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .