2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சம்பியன்ஸ் லீக்கை யுனைட்டட் கைப்பற்றுமோ தெரியாது: வான் கால்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றக்கூடிய அணியாக மன்செஸ்டர் யுனைட்டெட் அணி இருக்குமோ எனத் தெரியாது என, அவ்வணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் தெரிவித்துள்ளார்.

கடந்த பருவாகாலத்தின் போது சம்பியன்ஸ் லீக்குக்கு தகுதி பெறாத மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, இம்முறை குழுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

தான் பயிற்சியாளராக பதவியேற்றதுக்கு பிற்பாடு, 250 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுன்ஸ்களைச் செலவழித்த போதிலும், ஐரோப்பாவின் சிறந்த அணியாக இறுக்கக்கூடிய தகமை, தனது அணிக்கு இருக்கின்றதோ எனத் தெரியாது என லூயிஸ் வான்கால் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இம்முறை தகுதி பெறுவது இலக்காக இருந்ததாகவும், தற்போது நாங்கள் உயர் மட்டத்தில் போட்டிகளை விளையாடுபவர்கள் என நிரூபிக்க வேண்டுமென கூறிய அவர், ஆனால் இது பற்றி எனக்குத் தெரியாதெனவும், பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .