2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சமநிலையில் முடிந்தது பார்சிலோனா - நியூ வலென்சியா

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லா லிகா கால்பந்தாட்டப் போட்டித் தொடரில், புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா அணி, நியூ வலென்சியா அணிக்கெதிரான போட்டியைச் சமநிலையில் முடித்துக் கொண்டது. மற்றொரு போட்டியில், மூன்றாமிடத்திலுள்ள றியல் மட்ரிட் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் கெட்டாபே அணியைத் தோற்கடித்தது.

பார்சிலோன அணிக்கும் நியூ வலன்சியா அணிக்குமிடையிலான போட்டியில், முதற்பாதியில் இரு அணிகளுமே கோல்களைப் பெற்றுக் கொண்டிருக்காத நிலையில், 0-0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியில், போட்டியின் 59ஆவது நிமிடத்தில், பார்சிலோனாவின் நம்பிக்கைக்குரிய வீரராக மாறியிருக்கும் லூயிஸ் சுவரேஸ், கோலொன்றைப் பெற்று, பார்சிலோனாவுக்கு 1-0 என்ற முன்னிலையை வழங்கினார். அதன்படி, பார்சிலோனா அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 86ஆவது நிமிடத்தில் சான்டி மினா பெற்றுக் கொண்ட கோலால், நியூ வலென்சியா அணி, 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியைச் சமநிலையில் முடித்துக் கொண்டது.

றியல் மட்ரிட் அணிக்கும் கெட்டாபே அணிக்குமிடையிலான போட்டியில், 4ஆவது நிமிடத்திலும் 16ஆவது நிமிடத்திலும் கரிம் பென்ஸெமா பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், 2-0 என்ற முன்னிலையைப் பெற்ற றியல் மட்ரிட் அணி, 35ஆவது நிமிடத்தில் கரெத் பேல் பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், 3-0 என்ற நிலையை அடைந்தது.

அண்மைக்காலமாக கோல்களைப் பெறுவதில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, 38ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்று, 4-0 என்ற முன்னிலையை வழங்கினார்.

இரண்டாவது பாதியில், 70ஆவது நிமிடத்தில் கெட்டபே அணியின் அலெக்ஸிஸ் கோலொன்றைப் பெற்றார். எனினும், மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், 4-1 என்ற கோல் கணக்கில், றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .