2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சமநிலையில் அத்லெட்டிகோ – அல்மெரியா போட்டி

Mithuna   / 2024 பெப்ரவரி 25 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அல்மெரியாவில் ஞாயிற்றுக்கிழமை (25)  அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் சமப்படுத்தியது.

அத்லெட்டிகோ சார்பாக ஏஞ்சல் கொரேரா, றொட்றிகோ டி போல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அல்மெரியா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லூகா றொமேரோ பெற்றிருந்தார்.

லா லிகா புள்ளிகள் பட்டியலில் 62 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் உள்ளது. 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனாவும், 56 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஜிரோனாவும், 52 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும் காணப்படுகின்றன. இதில் றியல் மட்ரிட்டும், ஜிரோனாவும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X