Shanmugan Murugavel / 2025 மார்ச் 10 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டெக்லான் றைஸ் பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை புரூனோ பெர்ணாண்டஸ் பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற லிஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் குகுரெல்லா பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 55 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 49 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றது. இதில் மற்றைய அணிகளை விட லிவர்பூல் ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago