Shanmugan Murugavel / 2025 ஜனவரி 19 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியது.
ஆர்சனல் சார்பாக கப்ரியல் மார்டினெல்லி, கை ஹவேர்ட்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வில்லா சார்பாக யூரி டெலிமான்ஸ், ஒலி வட்கின்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் லிவர்பூல் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்திலுள்ளது. 44 புள்ளிகளுடன் ஆர்சனல் இரண்டாமிடத்திலும், 41 புள்ளிகளுடன் நொட்டிங்ஹாம் பொரெஸ்ட் மூன்றாமிடத்திலும், 38 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. இதில் லிவர்பூலும், நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
21 minute ago
28 minute ago
34 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
34 minute ago
34 minute ago