Shanmugan Murugavel / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பெனெவெந்தோவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் முடித்துக் கொண்டது.
ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றதோடு, பெனெவெந்தோ சார்பாகப் பெறப்பட்ட கோலை கயெட்டானோ லெய்ட்ஸியா பெற்றிருந்ந்தார்.
இந்ந்நிலையில், அத்லாண்டாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் ஹெலாஸ் வெரோனுக்குமிடையிலான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்திருந்தது. ஹெலாஸ் வெரோனா சார்பாக, மிகேல் வெலோஸோ, மத்தியா ஸக்கனி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago