Shanmugan Murugavel / 2021 ஜனவரி 14 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், புல்ஹாமுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றதோடு, புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் கவெலெய்ரோ பெற்றிருந்தார்.
இப்போட்டியின் முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 36 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட் உள்ளது. 33 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லிவர்பூலும், 32 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் உள்ளது. லெய்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன் ஆகியனவும் தலா 32 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காம், ஐந்தாமிடங்களில் உள்ளது. இதில் மற்றைய அணிகளை விட மன்செஸ்டர் சிற்றி ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளது.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago