Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி சமப்படுத்தியது.
நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே-பிராங்க் ஸம்போ அங்குய்ஸா பெற்றதோடு, பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை டான் என்டோயி பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் காணப்படுகின்றது. 65 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும், 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும் காணப்படுவதோடு, 57 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னா காணப்படுகின்றது.
8 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Feb 2026