Shanmugan Murugavel / 2021 மே 12 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், லெவன்டேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்குமிடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, பெட்ரி, உஸ்மனே டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெவன்டே சார்பாக, கொன்ஸலோ மெலெரோ, ஜொஸே லூயிஸ் மொராலெஸ், சேர்ஜியோ லெயோன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டி முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 77 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டுள்ளது. 76 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனாவும், 75 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டும், 71 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன.
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago