Shanmugan Murugavel / 2021 ஜனவரி 31 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், நியூகாசில் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்திருந்தது. நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கலும் வில்சன் பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 44 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி உள்ளது. 41 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் யுனைட்டெட் உள்ளபோதும், ஒரு போட்டி சிற்றியை விட அதிகமாக விளையாடியுள்ளது. 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 37 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலும் காணப்படுகின்றன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago