Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 08 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் றியல் மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றிருந்த நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் சுவாரஸ் பெற்றிருந்தார்.
இப்போட்டி முடிவில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில், 59 புள்ளிகளுட்டன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் உள்ளது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனாவும், 54 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றியல் மட்ரிட்டும், 48 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவுமுள்ளன. இதில், றியல் மட்ரிட்டும், பார்சிலோனாவும் மற்றைய இரண்டு அணிகளை விட்ட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago