2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சமநிலையில் லிவர்பூல் – பிறைட்டன் போட்டி

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 29 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டியகோ ஜோட்டா பெற்றதோடு, பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை பஸ்கால் குறொப் பெற்றிருந்தார்.

இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், லீட்ஸ் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது. லீட்ஸ் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றஃபின்ஹா பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X