Shanmugan Murugavel / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லிவர்பூலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
லிவர்பூல் சார்பாக கோடி கக்போ, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். யுனைட்டெட் சார்பாக லிஸான்ட்ரோ மார்டினெஸ், அமட் டியல்லோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 46 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 40 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 37 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும், 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. இதில் லிவர்பூலும், பொரெஸ்டும் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago