Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
கட்டாரில் புதன்கிழமை (18) நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பிளெமெங்கோவுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
இப்போட்டியின் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இரண்டு அணிகளும் சமநிலையில் காணப்பட்டதுடன், மேலதிக நேர முடிவிலும் அவ்வாறே காணப்பட்டிருந்தன. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிவிச்சா கவர்செலியா பெற்றதோடு, பிளெமெங்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்ஜினியோ பெற்றிருந்தார்.
முதலாவது பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் வித்தின்ஹாவும், பிளெமெங்கோவின் நிகொலஸ் டீ லா குறூஸும் உட்செலுத்தியிருந்தனர். பின்னர் பிளெமெங்கோவின் அடுத்த நான்கு சாவும் நிகேஸ், பெட்ரோ, லியோ பெரைரா, லூயிஸ் அரஜுவோவின் பெனால்டிகளை பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளர் மட்வே ஸஃபொனோவ் தடுத்திருந்தார். பரிஸ் ஸா ஜெர்மைனின் உஸ்மான் டெம்பிலியின் பெனால்டி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், பிராட்லி பார்கோலாவின் பெனால்டியை பிளெமெங்கோவின் கோல் காப்பாளர் அகஸ்டின் றோஸி தடுத்திருந்தார். இந்நிலையில் பரிஸ் ஸா ஜெர்மைனின் நுனோ மென்டிஸ் பெனால்டியை உட் செலுத்த 2-1 என்ற ரீதியில் பெனால்டியில் வென்று பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
10 minute ago
26 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
41 minute ago
1 hours ago