Shanmugan Murugavel / 2025 ஜனவரி 07 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் ஏ.சி மிலன் சம்பியனானது.
சவுதி அரேபியாவின் றியாத்தில் இன்று (07) நடைபெற்ற இன்டர் மிலனுடனான இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே ஏ.சி மிலன் சம்பியனானது.
ஏ.சி மிலன் சார்பாக தியோ ஹெர்ணாண்டஸ், கிறிஸ்டியன் புலிசிச், தம்மி ஏப்ரஹாம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் மிலன் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், மெஹ்டி தரெமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இத்தாலியக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அத்லாண்டாவை வென்று இறுதிப் போட்டிக்கு சீரி ஏ தொடரில் சம்பியனான இன்டர் மிலனும், கோப்பா இத்தாலியா தொடரில் சம்பியனான ஜுவென்டஸை வென்று சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற ஏ.சி மிலனும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago