Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா முன்னேறியுள்ளது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டை 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு பார்சிலோனா தகுதி பெற்றுள்ளது.
டொட்டமுண்டின் மைதானத்தில் புதன்கிழமை (16) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும், தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையிலேயே 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது.
9 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
46 minute ago