2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சம்பியன்ஸ் லீக்: இன்டர் மிலனை வென்றது றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்குமிடையிலான குழு பி போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.

றியல் மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா, சேர்ஜியோ றாமோஸ், றொட்றிகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் மிலன் சார்பாக, லொட்டரோ மார்ட்டின்ஸ், இவான் பெரிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. லிவர்பூல் சார்பாக, டியகோ ஜோட்டா மூன்று கோல்களையும், மொஹமட் சாலா, சாடியோ மனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, போர்த்துக்கல் கழகமான போர்டோவின் மைதானத்தில் நடைபெற்ற குழு சி போட்டியொன்றில் 0-3 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய் போர்ட்டோவிடம் தோல்வியடைந்தது. போர்டோ சார்பாக, மூஸா மரெகா, சேர்ஜியோ ஒலிவெய்ரா, லூயிஸ் டயஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், ரஷ்யக் கழகமான லொகொமொட்டிவ் மொஸ்கோவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொஸே கிம்மென்ஸ் பெற்றதோடு, லொகோமொட்டிவ் மொஸ்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டன் மிரான்சுக் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X