Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில் துருக்கியக் கழகமான கலடசரேயின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 2-5 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் தோற்றது.
ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டெயுன் கூப்மெய்ன் பெற்றிருந்தார். கலடசரே சார்பாக நோவா லாங் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, கப்ரியல் சரா, டேவின்சன் சஞ்சேஸ், சாஷா பொயே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை சக பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவின் மைதானத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக டிசையர் டுவே இரண்டு கோல்களையும், அஷ்ரஃப் ஹக்கிமி ஒரு கோலையும் பெற்ற நிலையில், மொனாக்கோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் புளோரியன் பலோகன் பெற்றிருந்தார்.
இந்நிலையில் போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் வினிஷியஸ் ஜூனியர் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
குறித்த போட்டியின்போது வினிஷியஸ் கோலைப் பெற்ற பின்னர் பெய்பிக்காவின் ஜனுலுக்கா பிறெஸ்டியானி இனத்துவேஷ வெறியை வெளிப்படுத்தியமையென்று கூறப்பட்டமைக்காக இப்போட்டி 11 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதுதவிர, தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவுடனான முதலாவது சுற்று தகுதி காண் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .