Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 17 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆகியன உள்வாங்கப்பட்டுள்ளன.
இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவுடனான அவ்வணியின் மைதானத்தின் முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மட்ரிட், தமது பயிற்சி மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸீமா, சேர்ஜியோ றாமோஸ், மார்கோ அஸென்ஸியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் முரியெல் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா மொச்சென்கிளெட்பாவை 2-0 என்ற கோல் கணக்கில், முதலாவது சுற்றில் வென்றிருந்த சிற்றி, இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, 4-0 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, இல்கி குன்டோகன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago