2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் றூணி

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சர்வதேசப் போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவரான வெய்ன் றூணி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக, நேற்று முன்தினம் அறிவித்தார். சர்வதேசப் போட்டிகளில் அவரை மீண்டும் சேர்ப்பதற்கு, இங்கிலாந்து அணியின் முகாமையாளர் கரித் சௌத்கேட் முயன்ற நிலையிலேயே, தனத ஓய்வை, றூணி அறிவித்துள்ளார்.

31 வயதான றூணி, இங்கிலாந்து சார்பாக 119 போட்டிகளில் விளையாடி, 53 கோல்களைப் பெற்றிருந்தார்.

மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாகப் பதவியேற்ற ஜொஸெ மொரின்யோவின் கீழ், அவ்வணியின் தலைமைத்துவத்தையும் பின்னர் இடத்தையும் இழந்த றூணி, பின்னர் எவேர்ட்டன் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப் பருவகாலத்தில் அவர், சிறப்பான பெறுபேறுகளை, இதுவரை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பெறுபேறுகள் தொடர்பாகப் பாராட்டுவதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை, றூணிக்கு அழைப்பெடுத்த சௌத்கேட்டிடம், தனது முடிவு குறித்து, றூணி வெளிப்படுத்தியுள்ளார்.

“எதிர்வரும் போட்டிகளில், இங்கிலாந்துக் குழாமில் என்னை அவர் விரும்புகிறார் என, கரித் சௌத்கேட் குறிப்பிட்டமை, மிகச்சிறப்பானது. அதை நான் மிகவும் நன்றியுடன் பார்க்கிறேன்.

“ஏற்கெனவே நீண்ட, கடினமான யோசனைகளை வெளிப்படுத்திய பின்னர், சர்வதேசக் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்துள்ளேன் என, சௌத்கேட்டிடம் நான் குறிப்பிட்டேன்.

“இது, மிகவும் கடினமான முடிவாக அமைந்தது. என்னுடைய குடும்பம், எவேர்ட்டனில் எனது முகாமையாளர், எனக்கு நெருக்கமானவர்கள் ஆகியோருடன், இதுபற்றிக் கலந்துரையாடினேன்.

“இங்கிலாந்துக்காக விளையாடுவது, எனக்கு எப்போதுமே விசேடமாக இருந்தது. வீரராகவோ அல்லது தலைவராகவோ நான் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தடவையும், எனக்குப் பெருமிதம் தரும் ஒன்றாக அமைந்தது. எனக்கு உதவிய அனைவருக்கும், நான் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், வெளியேறுவதற்கான நேரம் தற்போது சரியாகிவிட்டது என நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .