Shanmugan Murugavel / 2021 ஜூலை 06 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியானது இலங்கை நேரப்படி நாளை மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் டெஸ்ட் குழாமுக்குத் திரும்பியிருப்பது பங்களாதேஷுக்கு பலத்தை வழங்குகின்றபோதும், தமிம் இக்பாலின் பங்கேற்பு சந்தேகமாகவுள்ளது பின்னடைவாகக் காணப்படுகின்றது.
இதேவேளை, முஷ்பிக்கூர் ரஹீம் இப்போட்டியில் விளையாடுவார் எனக் கூறப்படுகின்ற நிலையில், அவருடன் சேர்ந்து சிரேஷ்ட வீரர்கள் ஷகிப் அல் ஹஸன், மகமதுல்லாவிலேயே பங்களாதேஷின் வெற்றி வாய்ப்பு தங்கியுள்ளது.
இந்நிலையில், மறுபக்கமாக சிம்பாப்வேயின் வெற்றி வாய்ப்பும் அணித்தலைவர் ஷோன் வில்லியம்ஸ், பிரண்டன் டெய்லர், கிரேய்க் எர்வினின் பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago