Editorial / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, சிம்பாப்வேக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிழக்கு இலண்டனில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ரஸி வான் டர் டூஸன் 56 (44), டேவிட் மில்லர் 39 (34), பப் டு பிளெஸி 34 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கைல் ஜார்விஸ் 3, கிறிஸ்தோபர் மெபு 2, பிரெண்டன் மவுட்டா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களையே பெற்று 34 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், பீற்றர் மூர் 44 (21), பிரெண்டன் மவுட்டா 28 (14), ஷோண் வில்லியம்ஸ் 21 (22), பிரெண்டன் டெய்லர் 19 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இம்ரான் தாஹீர் 5, அன்டிலி பெக்லுவாயோ, ஜூனியர் டலா ஆகியோர் தலா 2, லுங்கி என்கிடி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக இம்ரான் தாஹீர் தெரிவானார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago