Editorial / 2018 ஜூலை 17 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், புலவாயவோவில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹமில்டன் மஸகட்ஸா 59 (75), பீற்றர் மூர் 50 (86) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், உஸ்மான் கான் 4, ஹஸன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 195 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 36 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து 14 ஓவர்கள் மீதமிருக்க 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் ஆட்டமிழக்காமல் 117 (129), இமாம்-உல்-ஹக் 44 (51), பாபர் அஸாம் ஆட்டமிழக்காமல் 29 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக பக்கர் ஸமன் தெரிவானார்.
அந்தவகையில், இத்தொடரின் முதலாவது போட்டியிலும் வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான், இத்தொடரில் 2-0 என்ற வகையில் முன்னிலை வகிக்கிறது.
21 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago