2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சிற்றியிலிருந்து விலகும் அகுரோ

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 30 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ, பருவகால முடிவில் கழகத்திலிருந்து விலகவுள்ளதாக கழகம் அறிவித்துள்ளது.

32 வயதான சேர்ஜியோ அகுரோவின் ஒப்பந்தமானது பருவகால முடிவில் முடிவடைவதுடன், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதென அகுரோவுக்கு கூறப்பட்டுள்ளது.

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து கடந்த 2011ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட அகுரோ, சிற்றிக்காக 384 போட்டிகளில் விளையாடி 257 கோல்களைப் பெற்றுள்ளார்.

அகுரோவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகங்களான பார்சிலோனா, றியல் மட்ரிட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் கைச்சாத்திட ஆர்வமாயுள்ளதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .