Editorial / 2018 ஜனவரி 15 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
இப்போட்டியில், லிவர்பூல் சார்பாக, அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின், றொபேர்ட்டோ பெர்மினோ, சாடியோ மனே, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மன்செஸ்டர் சிற்றி சார்பாக, சாடியோ மனே, பெர்னார்டோ சில்வா, இல்கி குன்டோகன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்பருவகால பிறீமியர் லீக் தொடரில் முதற்தடவையாக மன்செஸ்டர் சிற்றி தோற்றுள்ளது. இப்போட்டிக்கு முதல் 18 போட்டிகளில் தொடர்ச்சியாக மன்செஸ்டர் சிற்றி தோல்வியடையாமல் இருந்திருந்தது.
இதேவேளை, ஆர்சனல், போர்ண்மெத் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் போர்ண்மெத் வென்றது. போர்ண்மெத் சார்பாக, கலும் வில்சன், ஜோர்டன் இபே ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில், ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹெக்டர் பெல்லெரின் பெற்றார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago