Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற அட்டலாண்டா அணியுடனான போட்டியில் சீரி ஏயின் நடப்பு சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றுள்ளது.
இப்போட்டியின் 29ஆவது நிமிடத்தில் கொன்ஸலோ ஹியூகைன் பெற்ற கோல் மூலமாக முன்னிலை பெற்ற ஜுவென்டஸ், போட்டியின் 81ஆவது நிமிடத்தில் பிளெய்ஸி மத்தியூடி பெற்ற கோலோடு போட்டி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இப்போட்டி முடிவில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜுவெனடஸ் முதலிடத்தில் காணப்படுகின்றது. ஜுவென்டஸை விட நான்கு புள்ளிகள் குறைவாக 70 புள்ளிகளைப் பெற்றுள்ள நாப்போலி இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. றோமா 56 புள்ளிகளுடனும் லேஸியோ 53 புள்ளிகளுடனும் முறையே மூன்றாவது, நான்காமிடங்களில் காணப்படுகின்றன.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago