2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

செல்சி செல்லும் மொராட்டா?

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான பியர்-எமெரிக்-உபமெயாங்கை ஒப்பந்தம் செய்ய முடியா விட்டால், இன்னொரு லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அல்வரோ மொராட்டாவைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி எதிர்பார்த்துள்ளது.

33 வயதான உபமெயாங்குடன் ஒப்பந்தத்தை எட்டியுள்ளபோதும், பார்சிலோனாவுடன் செல்சி ஒப்பந்தத்தை எட்டவில்லை எனப்படுகிறது.

இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுக்கு கடனடிப்படையில் தமது முன்களவீரர் றொமெலு லுக்காக்குவை வழங்கியதுடன், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்குக்கு திமோ வேர்னரை அனுப்பிய நிலையில் செல்சிக்கு முன்களவீரரொருவர் தேவைப்படுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .