Shanmugan Murugavel / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக, இல்கி குன்டோகன், பில் பொடென், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் ஹட்ஸன்-ஒடோய் பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 33 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 33 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெணிக்கை அடிப்படையில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. மூன்றாமிடத்தில் 32 புள்ளிகளுடன் லெய்செஸ்டர் சிற்றியும், 29 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரும் காணப்படுகின்றது. இதில், மற்ற அணிகளை விட லெய்செஸ்டர் ஒரு போட்டி கூட விளையாடியுள்ளது.
சிற்றி 29 புள்ளிகளுடன் கோலெண்ணிக்கை வித்தியாசம் காரணமாக ஐந்தாமிடத்தில் உள்ளது. டொட்டென்ஹாமை விட ஒரு போட்டி குறைவாகவே சிற்றி விளையாடியுள்ளது. ஆறாமிடத்தில் 29 புள்ளிகளுடன் எவெர்ற்றன் காணப்படுகின்றது.
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago