Shanmugan Murugavel / 2015 நவம்பர் 23 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், ரொஜர் பெடருக்கெதிரான ஏ.டி.பி உலகச் சுற்றுத் தொடர் இறுதிகளின் இறுதிப் போட்டியில் வெற்றிகொண்டு, தனது 5ஆவது கிண்ணத்தை வென்றதோடு, 2015ஆம் ஆண்டுக்கான அவரது பருவகாலம், உச்சநிலையில் முடிவடைந்தது.
இவ்வாண்டில், மொத்தமாக 11 பட்டங்களை வென்றுள்ள நொவக் ஜோக்கோவிச், அவற்றில் 6 பட்டங்கள், மாஸ்டர்ஸ் கிண்ணப் பட்டங்களாகக் காணப்பட்டன.
இம்முறை, பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அவர், ஏனைய 3 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் வெற்றிகொண்டார்.
இவ்வாண்டில், 82 போட்டிகளில் வெற்றியையும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்த அவர், 93.18 என்ற வெற்றிச் சதவீதத்தைக் கொண்டுள்ளார்.
அத்தோடு, இவ்வாண்டில் அவர், 18.767 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பரிசுப் பணமாக வெற்றிகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago