2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஜோன் மூனி ஓய்வு

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து அணியின் சகலதுறை வீரர் ஜோன் மூனி, உடனடியாக அமுலுக்குவரும் வகையில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான மூனி, அயர்லாந்து சார்பாக மூன்று உலகக் கிண்ணத் தொடர்களில் பங்குபற்றிய நான்கு வீரர்களில் ஒருவராவார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில், பெங்களூரில் வைத்து இங்கிலாந்து அணியை அயர்லாந்து வென்றபோது, வெற்றி ஓட்டத்தைப் பெற்றமைக்காக ஞாபகமூட்டப்படும் அவர், அடுத்த கட்டம் நோக்கிச் செல்வவிரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்காக 64 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 3 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 23.48 என்ற சராசரியில் 963 ஓட்டங்களைப் பெற்றதோடு, 34.06 என்ற சராசரியில் 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். தவிர, 27 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .