2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஜக் வோனருக்கு ஆயுட்காலத்தடை

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட நடவடிக்கைகளில்  ஈடுபடுவதற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளத்தின் (பிபா) முன்னாள் பிரதித் தலைவரான ஜக் வோனருக்கு ஆயுட்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரினிநாட்டைச் சேர்ந்த 72 வயதான வோனர், கரீபியன் மற்றும் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளத்தின் (கொன்ககவ்) முன்னாள் தலைவராவார். எனினும் இவர் 2011ஆம் ஆண்டிலியே பிபாவிலிருந்து விலகியிருந்தார்.

இவர் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்நோக்கியிருக்கும் நிலையில் விசாரணைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு  கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். எனினும் கையூட்டாக மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை பெற்றதை அவர் மறுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .