2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஜயந்த வர்ணவீரவுக்கு மூன்று வருடத்தடை

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சர்வதேச விளையாட்டரங்கின் முன்னாள் பராமரிப்பாளரான ஜயந்த வர்ணவீரவுக்கு, மூன்று வருடத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மோசடிக்கெதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமையின் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த வர்ணவீர, இரண்டு தடவைகள், அவற்றில் கலந்துகொள்ளாமல் விட்டிருந்தார். அத்தோடு, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் அவர் தவறியிருந்தார்.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 2 வருடங்களுக்கு, அச்சபை தடை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே, தனது தடை பற்றிய விவரத்தை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
55 வயதான வர்ணவீர, காலி மைதானப் பராமரிப்பாளர் என்பதையும் தாண்டி, 1986ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை, இலங்கைக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .