Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டில் இருபதுக்கு – 20 போட்டிகளில் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸே அதிகமாக 89 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஜிம்மில் நீண்ட பயிற்சிகளாலேயே ஆறு ஓட்டங்களைப் பெறக் கூடியதாகவுள்ளது என பிலிப்ஸ் கூறியுள்ளார். இந்த நீண்ட பயிற்சிகளில், நாளொன்றுக்கு 800 பிரஸ்-அப்கள் உள்ளடங்குகின்றன.
இவ்வாண்டில் 857 பந்துகளை எதிர்கொண்டு 89 ஆறு ஓட்டங்களை பிலிப்ஸ் பெற்றுள்ள நிலையில், இரண்டாமிடத்தில் 810 பந்துகளை எதிர்கொண்டு 82 ஆறு ஓட்டங்களை இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன் காணப்படுகின்றார். மூன்றாமிடத்தில், 587 பந்துகளை எதிர்கொண்டு 75 ஆறு ஓட்டங்களைப் பெற்றவாறு மேற்கிந்தியத் தீவுகளின் எவின் லூயிஸ் காணப்படுகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago